என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ராமஜென்ம பூமி
நீங்கள் தேடியது "ராமஜென்ம பூமி"
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #RamJanmabhoomicase #BabriMasjidcase
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் இந்து மதக் கடவுளான ராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528-ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948-ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது.
1980-களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின.
1989-ல் அலஹாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின. மசூதியை இடித்து விட்டு அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின.
6-12-1992 அன்று கரசேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன.
பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. 1993-ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம் (அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக் போர்டு வாரியத்துக்கா), அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது? போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
2010-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும் இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ராம ஜன்ம பூமி இயக்கத்துக்கும் (சங் பரிவார் அமைப்பு), ஒரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி நிர்மோஹி அகோரா என்ற இந்து அமைப்பிற்கும் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷ்வ இந்து பரிஷத், மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இரண்டும் அறிவித்தன.
இந்து மகாசபை செய்த மேல் முறையீட்டு மனுவைப் ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட், மே 2011-ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் இம்மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு எது? என்று தீர்மானித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என இன்று தெரிவித்துள்ளனர். #RamJanmabhoomicase #BabriMasjidcase

இந்நிலையில், இந்த மேல் முறையீட்டு மனுவின் மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் இம்மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு எது? என்று தீர்மானித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என இன்று தெரிவித்துள்ளனர். #RamJanmabhoomicase #BabriMasjidcase
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி கோவில் அமைந்துள்ள பகுதியில் தடையை தாண்டி அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். #Ayodhya #RamJanmaBoomi
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் தடையை தாண்டி அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இதுதொடர்பாக, ராமஜென்ம பூமியின் டெபுடி சூப்பிரன்டெண்ட் ராஜேந்திர சிங் கூறுகையில், ராமர் கோவில் அருகில் வந்த ஒரு காரை மடக்கி நிறுத்தினோம். அதில் இருந்த பவான் சவுரையா, நந்த்லால் திவாரி, ஆஷிஷ், கவுரவ் பாண்டே மற்றும் உமாசங்கர் சேத் ஆகிய 5 பேரை தடுத்து நிறுத்தினோம்.
விசாரணையில், அவர்கள் வழிதவறி அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவித்தனர். அதை உறுதிசெய்த பின்னரே அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதித்தோம் என தெரிவித்தார். #Ayodhya #RamJanmaBoomi
×

X